Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று ராடன் மீடியா நிறுவனத்திளும் வருமானவரித்துறையினர் சோதனை!..

•On April 11, 2017
radika
Share
radika கடந்த 7-ஆம் தேதி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பெரும் தொகை ஒன்றை சரத்குமார் வாங்கியதால், இந்த அதிரடி சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வுத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரான சரத்குமாரிடம், நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் சரத்குமாரின் மனைவியும்,நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தி நகரில் உள்ள ராடன் மீடியா நிறுவனத்தில் சோதனை நடைபெற்றுவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.