இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே. நகர்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 27) வெளியிடப்பட உள்ளது. இதில் வேட்புமனுக்களை திரும்ப பெருபவர்கள் மாலை 3 மணி வரை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிடோர் போட்டியிடுகின்றனர்.
தற்பொழுது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள இன்று கடைசி நாள் ஆகும். பிற்பகல் 3 மணிக்குள், மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து மாலை 5 மணிக்கு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
என்று கூறியுள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
