இன்று துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? - திமுகவில் பரபரப்பு

தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
அதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று சில மூத்த அமைச்சர்களும் கூறி வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் பரவுகிறது.
அதன்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் பரவுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
