Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது ரேசன் கார்டில் திருத்தம் செய்ய...

•On June 18, 2017
Smart Ration Card Front
Share
Smart Ration Card Front ரேசன் கார்டில் திருத்தம் , மாற்றம் செய்ய சென்னையில் இன்று (ஞாயிற்றுகிழமையன்று) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னையில் 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன் 2017 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே 17.06.2017 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால்குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.