“இனி நான் நல்ல ‘சாமி’”.. ‘கங்காரு’ மூலம் தடம் மாறும் இயக்குனர் சாமி

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ என தொடர்ந்து சர்ச்சைகுரிய படங்களின் மூலம் பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரித்து சிக்கலில் மாட்டியவர் இயக்குனர் சாமி. ஆனால் இப்போது சாமி ‘நல்ல சாமி’யாக மாறி அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கியுள்ள படம் தான் ‘கங்காரு’. இதன்மூலம் “நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ உரக்க சொல்லியிருக்கிறார் சாமி. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கிறார்.
“விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்தமாதிரி இங்கே நிலைமை இல்லை.யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது.” என்ரு தன்னிலை விலமே தருகிறார் சாமி.
எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு என்கிறார் சாமி. அண்ணன் தங்கை பாசமெல்லாம் காலம் கடந்தது விட்டதே என்றால், “நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன. ‘கங்காரு’ நவீன பாசமலர்... நிச்சயம் இது பேசப்படும்” என்கிறார் சாமி உறுதியாக.
இதில் நாயகனாக அர்ஜுனா நடிக்க இவரது தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். மற்றும் வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர்.சுந்தர்ராஜன் என முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள். பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
