Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த வருட இறுதியில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாவது உறுதி..!

•On October 16, 2014
CutPicture.com_2014-Oct-16_12_51_20
Share

தான் நடித்த ஒரு படம் கடந்த வருடமே ரிலீஸாக வேண்டிய நிலையில் அதை ரிலீஸ் செய்யாமல் அதற்கடுத்து ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டதும், இன்னொரு படத்தில் நடித்து முடிக்கப்போவதும் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் கமலுக்கே புது அனுபவமாகத்தான் இருக்கும்..

கடந்த வருட ஆரம்பத்தில் வெளியான ‘விஸ்வரூபம்’ படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல்.

‘விஸ்வரூபம்-2’வுடன் ஒப்பிட்டால் ‘விஸ்வரூபம்’ ஒரு சின்ன குழந்தை மாதிரி இருக்கிறது என்று ட்ரெய்லரை பார்த்த சிலர் திரி கொளுத்திப்போட, இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இப்போதே இருமடங்காக இருக்கிறது.

படத்தில் இன்னும் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கும் கொஞ்சமே கொஞ்சம் கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றனவாம். அதனால் அதையெல்லாம் முடித்து இந்த வருட இறுதிக்குள் ‘விஸ்வரூபம்-2’வை கமல் ரிலீஸ் செய்து விடுவார் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.