Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியன்-2 படத்திற்கு இசையமைக்கும் அனிருத்..!

•On May 31, 2018
39709
Share

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி வெளியான படம் 'இந்தியன்'.

அப்பா - மகன் என கமல் இரண்டு வேடங்களில் நடித்த அந்தப்படத்தில் அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்தனர்.

இந்தப் படம் வெளியாகி 22 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் தயாராகிறது. இந்தப்படம் குறித்து கடந்த வருடம் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டது.

தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பிறகு லைகா புரொடகபஷனுக்கு கைமாறியது. இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், இந்தியன்-2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமான அனிருத்துக்கு அடுத்த ஜாக்பாட்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.