இதுக்கெல்லாமா அடிப்பீங்க பத்திரிக்கை!

இதுவரைக்கும் புதுமனை புகு விழா, பூப்புனித நீராட்டு விழா, பணி நிறைவு விழா , திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு பத்திரிக்கை அடிப்பது வழக்கம். ஆனால் தற்போது இணையத்தில் ஒரு பத்திரிக்கை வைரலாகி வருகிறது. திருமண தம்பதிகளின் முதலிரவுக்கு செல்லும் துவக்க விழாவை கொண்டாட சுற்றமும் நட்பும் குடிகும்மியடிக்க அழைக்கிறோம் என்று அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு கடந்த 9-ம் தேதி இந்த வைப்பவம் நடைப்பெற்றதாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழை மணமகனின் நண்பர்கள் அடித்தாக கூறப்படுகிறது.
முதலிரவு போன்றவை நமது சமூகத்தில் மிகவும் அந்தரங்கமாக கருத்தப்படும் வேளையில் கட்டில் விளையாட்டு விழா அழைப்பிதழ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் இந்த அழைப்பிதழை சமூக வலைதளங்களில் பார்க்கும் நெட்டிசன் கள் " அடப்பாவிகளா! : இதுக்கெல்லாமா பத்திரிக்கை அடிப்பீங்க" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
