Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இணையத்தில் ஹிட்டடிக்கும் 'விதி மதி உல்டா' படத்தின் பாடல்கள்!

•On November 1, 2017
8264051d-4c21-4245-b101-d25255731753
Share
8264051d-4c21-4245-b101-d25255731753 Rite Media Works (RMW) சார்பில் ரமீஸ்ராஜா, நாயகி ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன் ஆகியோர் நடித்து இயக்குநர் விஜய்பாலாஜி இயக்கியுள்ளப்படம் 'விதி மதி உல்டா'. 'விதி மதி உல்டா' படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி சமீபத்தில் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யுவில் இசை கொண்டாட்டமாக நடந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் வினாயகமூர்த்தி இந்தப்படத்தின் பாடல்களை நேரடீயாக மேடையில் பாடும் இசை நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தார். படத்தில் பாடிய பாடகர்களான பின்னணிபாடகி சின்மயி, சித் ஸ்ரீராம், கானா பாலா ஆகியோர்களை வரவழைத்து மேடையில் மறுபடியும் பாடவைத்து , அவர்களோடு இணைந்து இசையமைப்பாளர் அஸ்வினும் பாடி ஆடி விழாவை சிறப்பாக இசை கொண்டாட்டமாக நடத்தினர் . இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகருமான ரமீஸ்ராஜா, நாயகி ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, சென்ராயன், ரெட்ஜெயன்ட் ராஜாசங்கர், , நடிகை சீதா, நடிகர் கலையரசன் , படத்தின் டைரக்டர் விஜய்பாலாஜி மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள். இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் you TUBE -ல் வெளியிடப்பட்டிருந்தது. அதை இதுவரை 35,00000 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இணையதளங்களிலும் , சமூக வலைதளங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தொடர்ந்து கிடைத்துவருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.