இணையத்தில் வைரலாகும் இளையதளபதி விஜயின் "தங்க தளபதி"

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்றால் அது இளையதளபதி விஜய் தான். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இவர் வரும் 22ம் தேதி தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கான கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள் இப்போதே தொடங்கிவிட்டனர். விஜய் பிறந்தநாளின் போது அன்னதானம், இரத்தானம், இலவச நோட் புத்தகம் வழங்குதல் என்று அமர்க்களப்படுத்தவிருக்கிறார்கள்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு விருந்தாக, வரும் 22ம் தேதி இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் அன்று அவர் புகழ் பாடும் தங்க தளபதி பாடல் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக #ThangaThalapathy என்னும் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும், டுவிட்டரில் CZAR VIJAY BDAY COMMON DP என்று ஹேஸ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. விஜய்யின் தங்க தளபதி டிபி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஉரு- விமர்சனம்
