இசைவிருந்து கொடுக்க கைக்கோர்த்த மூன்று பிரபல நிறுவனங்கள்

"Carvaan Lounge Tamil", இது "Saregama" மற்றும் "Amazon Prime Music" இணைந்து வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி "நினைத்தாலே இனிக்கும்" என்கிற திரைப்படத்தில் அமைந்த "நம்ம ஊரு சிங்காரி" எனும் பாடலின் வீடியோ பதிப்பு சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த இசை தொகுப்பில் மேலும் 6 பாடல்கள் வெளியாக உள்ளது, இசையமைப்பாளர்கள் தரன் குமார், சி. சத்யா, கிரீஷ் கோபாலகிருஷ்ணன், அருள் தேவ், Flute நவீன் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர். பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா பாடகர் கார்த்திக் அவர்களுடன் இணைந்து ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். பிரபல பாடகர்கள் சின்மயீ, சைந்தவி, தன்வீஷா, விஜய் பிரகாஷ், சத்திய பிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன், சூரஜ் சந்தோஷ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். இந்த பாடல்கள் அனைத்தும் வீடியோ வடிவில் விரைவில் வெளியாக உள்ளது.
Sahas Malhotra , Director, அமேசான் பிரைம் மியூசிக் , கூறியதாவது,
"பழைய பாடல்களின் மறுபதிவு (ரெட்ரோ) பிரைம் மியூசிக் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான இசை வகை ஆகும். Saregama வுடன் நாங்கள் முதலில் இணைந்த "Caarvan Lounge Season 1" மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இன்றைய சிறந்த சமகால தமிழ் பாடகர்களால் மீண்டும் உருவாக்கப்பட்ட அற்புதமான பாடல்களுடன் தமிழ் இசை ஆர்வலர்களை மகிழ்விக்க இம்முறை Saregama வுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த முயற்சியின் மூலம், ரெட்ரோ இசை ரசிகர்கள் பாடல்களை விளம்பரமில்லாமலும், பிரத்தியேகமாகவும், முதலில் பிரைமில் காணலாம்" என்று தெரிவித்தார்.
Rashna Pochkanawala, SVP, Saregama கூறியதாவது,
"கடந்த ஆண்டு நாங்கள் அமேசான் பிரைம் மியூசிக் உடன் இணைந்த "Carvaan Lounge Hindi" யைத் தொடர்ந்து, "Carvaan Lounge Tamil" என்பது அமேசான் பிரைம் மியூசிக் உடனான எங்கள் இரண்டாவது நிகழ்ச்சி ஆகும். Saregama வில் உள்ள எண்ணற்ற தமிழ் பாடல்களும், அதனை புதிய விதமாக வெளிக்கொண்டுவர தமிழில் பல்வேறு திறமையான கலைஞர்கள் இருப்பதாலும், இது மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது. தமிழ் இசைத் துறையில் மிகவும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அருமையான பழைய பாடல்களைத் தேர்வு செய்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் மறுபதிவு ஒரு தனித்துவமான இசைக் கருவியின் ஒலியைக் கொண்டிருக்கின்றன, இது அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்பது உறுதி. இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்த Amazon Prime Music ஐ விட சிறந்த நிறுவனம் இருக்க இயலாது" என்று கூறினார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
