Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆஸ்திரேலிய காமன்வெல்த்: துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் ககன் நரங்!

•On November 2, 2017
201711021135003963_GaganNarang-wins-Silver-in-50m-Rifle-prone-event-and-Bronze_SECVPF
Share
201711021135003963_GaganNarang-wins-Silver-in-50m-Rifle-prone-event-and-Bronze_SECVPF காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ககன் நரங் சர்வதேச போட்டிகளில் இதுவரை 7 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார். 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை மற்றொரு இந்திய வீரரான ஸ்வப்னில் குசலே தட்டிச்சென்றார். 201711021135003963_2_shooting-swapnil._L_styvpf

ககன் நரங்:

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷாஸர் ரிஸ்வி தங்கம் வென்றார். இந்த போட்டியின் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் ஓம்கார்சிங்கும், ஜித்துராயும் தட்டிச்சென்றனர். இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய விராங்கனை பூஜா கத்கர் தங்கம் வென்றார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹீனா சித்து தங்கம் வென்றார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் வென்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.