ஆஸ்கர் ரவிச்சந்திரன் போடும் 13 நாள் கணக்கு..!

‘ஐ’ படத்தின் வேலைகள் என்னவோ கன ஜோராகத்தான் நடந்து வருகின்றன. தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஷங்கரும் அவரது டீமும் பம்பரமாக சுழன்று வருகின்றனர். இந்தப்படத்தை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் எப்படியும் ரிலீஸ் செய்துவிடவேண்டும் என தீவிரமாக இருக்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
சூப்பர்ஸ்டாரின் ‘லிங்கா’ அவரது பிறந்தநாளான டிசம்பர்-12 அன்று வெளியாவது உறுதியாகிவிட்டது. அதனால் தனது படத்திற்கு கிறிஸ்துமஸ் தினத்தை பிக்ஸ் செய்துவிட்டால், அந்த 13 நாட்களில் ‘லிங்கா’ ஜுரம் தணிந்து ‘ஐ’ ஜுரம் ஆரம்பித்துவிடும் என்பது அவர் கணக்கு..
ஆனாலும் பள்ளிக்குழந்தைகள் எல்லாம் தேர்வு முடிந்து ‘லிங்கா’ பார்க்க இருப்பதே கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து விடப்படும் அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான். அதனால் கூடுதல் தியேட்டர்களும் கிடைக்க வாய்ப்பில்ல.. ஆகவே, ஆஸ்கரின் கணக்கு ஒர்க் வுட் ஆகுமா என்பது சந்தேகம் தான்...
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
