ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேரலை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக்கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் ஆர்.கே.நகரில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமாக உள்ள 256 வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களும் ஓட்டுக்கு பணம் பெறுவதாக திமுக சித்தரிக்கிறது என கூறிய தேர்தல் ஆணையம், தேர்தலை நிறுத்தும் நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
