ஆர்யா படத்தின் ஷூட்டிங் முடிந்தது...!

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் தான் ‘மீகாமன்’. இந்தப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதுகிறார்கள் என்பதாலேயே ரசிகர்களின் கவனம் மட்டுமல்ல, திரையுலகினரின் கவனமும் இப்போது ‘மீகாமன்’ பக்கம் திரும்பியுள்ளது. இந்தப்படத்தில் ஆர்யா ஒரு புத்திசாலி திருடனாக நடித்திருக்கிறாராம்.
இந்தப்படம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் பற்றிய படமாக உருவாகிறது. ஹாங்காங், மெக்ஸிகோ போன்ற வெளிநாடுகளில் உள்ள இந்த போதைமருந்து கடத்தல் கும்பல் பற்றி, இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் அவரது டீம் நிறையவே ஆராய்ச்சி செய்துவிட்டுத்தான் களத்தில் இறங்கியுள்ளனராம். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டன.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
