Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆந்திராவில் பேக்கரி நடத்துகிறார் தமன்னா...!

•On August 14, 2014
tamanna-bhatia-wallpaper-14
Share

‘வீரம்’ படம் வெளியாவதற்கு முன் கடந்த இரண்டு வருடமாக தமன்னா நடித்த படம் எதுவும் தமிழில் ரிலீஸாகவில்லை என்பது உண்மைதான்.. அதற்காக உடனே, இனிமேல் தமன்னா அவ்வளவுதான்.. மார்க்கெட் காலி.. பேக்கரி நடத்தப்போய்விட்டார் என்றெல்லாம் செய்தி போடும் நிலைமைக்கு வந்துவிட்டாரா என கொதிக்க வேண்டாம்..

ஆனால் நீங்கள் ஏன் விஷயத்தை அப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்.? தமிழில் இல்லாவிட்டாலும் இந்தியிலும் தெலுங்கிலும் ஸ்திரமாக காலை ஊன்றித்தானே நிற்கிறார்.. இப்போதுகூட தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘ஆகடு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா.

இவர்கள் இருவரும் ஜோடிசேரும் முதல்படமும் இதுதான். ‘இந்தப்படத்தில் தமன்னா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் கிளம்பின். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கிராமத்தில் அடக்க ஒடுக்கமான பெண்ணாகா ஸ்வீட்ஸ் & பேக்கரி கடை வைத்து நடத்தும் பெண்ணாக நடித்திருக்கிறாராம்.

இதுமட்டுமா.? இப்போது இந்தியிலும் அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ‘இட்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்’ படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி இருக்கிறது. ஆகவே சினிமாவுக்குள் நுழைந்து ஒன்பது வருடங்கள் ஆனால் தான் என்ன..? தனது இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் தமன்னா மீண்டும் வெற்றிகரமாக ஒரு ரவுண்டு வருவார் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.