Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'ஆண்டவன் கட்டளை'க்கு கிடைத்தது சிக்னல்!

•On September 21, 2016
aandavan-kattalai-shooting-spot-still3
Share
aandavan-kattalai-shooting-spot-still3 'காக்கா முட்டை' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம் 'ஆண்டவன் கட்டளை'.
இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 'இறுதிச்சுற்று' புகழ் ரித்திகா சிங் டூயட் பாடி ஆடியுள்ளார். 'கோபுரம் பிலிம்ஸ்' சார்பில் அன்புசெழியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்தது. படத்தை வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியிடவுள்ளது 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம். இந்நிலையில்,நேற்று படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் 'யு' சான்றிதழ் அளித்து கிரீன் சிக்னலிட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.