ஆங்கிலம் மற்றும் தமிழிலும் வருகிறது “பஸ் 657” ஹாலிவுட் திரைப்படம்:

பிரயாணிகளை ஏற்றி செல்கின்ற பேருந்தை ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, பேருந்து கடத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை, “ஸ்பீட்” மற்றும் “ஸ்பீட் 2” படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன், குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக ஒரு பேருந்தை கடத்த நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான், “Bus 657” படத்தின் சாரம்.
மிக சிறந்த கிளாசிக் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள ராபர்ட் டீ நிரோ இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
“தி டோர்ணமன்ட்” என்கிற ஒரு மகத்தான ஆக்ஷன் படத்தை அளித்த ஸ்காட் மாண், இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டீபன் சைரஸ் செபேர் மற்றும் மாக்ஸ் ஆடம்ஸ் இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
மனைவியை இழந்த ஒரு சூழலில், தனது ஒரே மகளான சிட்னி சில்வாவை(கேட் போஸ்வர்த்) வளர்த்திட அரும்பாடு படுகிறார், தி ஹோப் சில்வா(ராபர்ட் டீ நிரோ). நோய்வாய் பட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக சில்வாவிற்கு அதிக பணம் தேவை படுகிறது! வேறு வழி தெரியாமல், ஒரு பெரிய சூதாட்ட விடுதியை சூரையாடி, பணம் திருட திட்டம் போடுகிறார் சில்வா. எதிர்பாராத விதமாக, திட்டம் திசை திரும்ப, பேருந்து ஒன்றை கடத்த வேண்டிய நிலை சில்வாவிற்கு ஏற்படுகிறது.
இதை அடுத்து நிகழும் விளைவுகள் தான் படத்தின் உச்சம். எளிதாக முடிந்து விடும் என நினைத்தது, வேறு விதமாக மாறிவிட்டது கண்டு, திகைத்துப்போய் நிற்கிறார் சில்வா. இந்த சிக்கலில் இருந்து விடுபட்டு, தான் நினைத்ததை சாதிக்க முடிந்ததா என்பது தான் இப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகள்!
ஜெப்ரி டீன் மோர்கன், மோரிஸ் செஸ்நட் மற்றும் டைசன் வில்சன் ஆகிய் நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரான்டன் காக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் டால்வா படத்தொகுப்பை செய்துள்ளார். இது ஒரு “இம்பாசிபல் பிலிம்ஸ்’ன்” உருவாக்கம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
