Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைவிமர்சனம்..!

•On May 2, 2018
Avengers-Infinity-War-Chris-Evans-Chadwick-Boseman
Share
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார்கள். அப்படியிருக்க படம் முழுவதும் தன் பேவரட் சூப்பர் ஹீரோக்கள் அனைவரையும் காட்டி, மார்வல் காமிக்ஸ் எடுத்திருக்கும் பிரமாண்ட அவதாரம் தான் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் 19 வது படம் தான் இது. சுமார் 22 சூப்பர் ஹீரோக்கள் ஒற்றை வில்லனை எதிர்கொள்வது தான் படத்தின் மையக்கரு. கதை: ஆஸ்கார்ட் பிரதேசத்தை அழித்து, ஸாண்டர் கிரகத்திலிருந்து பவர் ஸ்டோனை கைப்பற்றிய பிறகு, தானோஸ் இந்தப் பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு ஆட்களிடமிருக்கும் ஆறு சக்திவாய்ந்த கற்களைக் கைப்பற்ற முயல்கிறான். பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தி, பாதி மக்களைக் கொல்வதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதுதான் தானோஸின் திட்டம். இந்தத் திட்டம் டாக்டர் ஸ்ட்ரேஞ்சிற்குத் தெரியவருகிறது. அவர், அயர்ன் மேனான டோனி ஸ்டார்க்கிற்கு செய்தி அனுப்புகிறார். அதே நேரத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ் வசம் இருக்கும் கல்லைக் கைப்பற்ற வரும் தானோஸின் ஆட்கள், டாக்டர் ஸ்ட்ரேஞ், ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர், அயர்ன் மேன் ஆகியோரை                                                     தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். பிறகு, பிற அவெஞ்சர்களுக்கு செய்தி போகிறது. பிறென்ன படம் முழுக்க மாயாஜாலமும் சாகஸங்களும்தான். ஆனால், இந்த அவெஞ்சர்கள் பல்வேறு கிரகங்களில் பிரிந்து சண்டையிடுவதால் அவர்களால் தானோஸை தோற்கடிக்க முடிவதில்லை. இந்த பாகத்தின் முடிவில் எல்லாக் கற்களையும் கைப்பற்றும் தானோஸ், சில அவெஞ்சர்களுக்கு மரண அடி கொடுத்துவிடுகிறான். இந்தப் படத்தின் கதை மிகச் சிக்கலானதுதான். ஆனால், கதையே புரியாமல் படத்தை ரசிக்க முடியும். ஒவ்வொரு சூப்பர் ஹீரோவும் தன் சக்தியை வெவ்வேறு விதமாக பயன்படுத்துவது, சிலர் தோல்வியடைவது என முழுப் படமும் சீட் நுனியில் உட்கார வைக்கிறார்கள்.படம் நெடுக வசனங்களில் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். மொத்தத்தில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் பிரம்மாண்டத்தின் உச்சம்...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.