Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அழகு குட்டி செல்லம் திரை விமர்சனம் - பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தால் மகாராணியாக வாழலாம்

•On January 1, 2016
azhaku kutti chellam review
Share

azhaku kutti chellam review

குழந்தைகளை வைத்து வெளிவந்துள்ள வித்தியாசமான படங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு விதமான குழந்தை பாசம். ஆண் குழந்தை தான் வேண்டும் என மூன்று பெண்  குழந்தை பெற்ற பிறகும் பிடிவாதம் பிடிக்கும் தந்தை. ஏதோவொரு ஆர்வத்தில் நடந்த தவறால் குழந்தையை வயிற்றில் சுமக்கும் கல்யாணமாகாத இளம் பெண். பெற்ற குழந்தை போரின்போது பலியானதை தாங்க முடியாமல் மனவேதனையில் இருக்கும் இலங்கை பெண். குழந்தை பாக்கியம் கிடைக்காத மனைவி. பிறந்தது முதலே யாரும் இல்ல அனாதையாய் வளரும் சிறுவன். பெற்றோர்கள் விவாகரத்து கேட்பதை நினைத்து கலங்கும் மகன். இவர்களை வைத்து தான் இந்த படத்தின் கதையே நகர்கின்றது. இறுதியில் இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து கதையை முடித்திருப்பது கணக் கச்சிதம்.

ஒரு குழந்தை பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தால் மகாராணியாக வாழலாம் என படம் பார்க்கும் நம்மை நெகிழ வைத்துள்ளார் இயக்குனர். எத்தனையோ பேர்  குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் அதே வேளையில் பல குழந்தைகள் அனாதையாக்கப்பட்டு தூக்கியெறியப்படுகிறது. கோவில் குளம் என சுற்றமால் அனாதை இல்லங்களை சுற்றினாலே போதும் என ஒற்றை வரியில்  ஆணியடித்தார்போல் கூறியுள்ளார் இயக்குனர்.

படத்திற்கு முக்கிய பலம், கருணாஸ், ரித்விகா, கிரிஷா. கருணாஸ் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிக தத்ரூபமாக உள்ளது.  பெண் குழந்தையை தூக்கிவீசய மனைவியை அடித்து உதைக்கும் போது நமக்கே வலிக்கின்றது. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கருணாஸ். மேலும் ரித்விகா சில காட்சிகள் வந்தாலும் மனதில் தங்கி விடுகின்றார். புதுமுகமாக அறிமுகமாகியுள்ள கிரிஷா மிக சிறப்பாக நடித்துள்ளார்.

படம் நீளமாக உள்ளதோ என நினைபவர்கள் கூட கிளைமாக்ஸ்யை பார்த்ததும் ஒரு முழுத்திருப்தியுடன் வெளியே வருவார்கள்.  இசையமைப்பாளர் தான் படத்தில் சில இடங்களில் தடுமாறியுள்ளார். மற்ற படி படம் குடும்பத்தினரை முழுக்க முழுக்க திருப்தி படுத்தும். தொடர்ந்து இது போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை  தர வேண்டும் என நீயா நானா ஆண்டனி மற்றும் இயக்குனர் சார்லஸிற்கும் ஒரு வேண்டுகோள்.

மொத்தத்தில் இப்படம் ஒரு குழந்தை குடிசையாக இருந்தாலும், மாளிகையாக இருந்தாலும் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தால் மகாராணியாக வாழலாம் என உணர்த்துகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.