அழகான பெண்ணை காதலித்து திருமணம் செய்யணும் என்ற லட்சியம்...படம் பெயர் "கன்னா பின்னா"!

மெஹெக் புரொக்டக்ஷன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் E சிவசுப்ரமணியன் & K R சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக வரவிருக்கிறது "கன்னா பின்னா்" அழகான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதே இலட்சியமாக கொண்ட ஒரு இளைஞனின் கதையே "கன்னா பின்னா".
படத்தை இயக்குவதோடு கதையின் நாயகனாக "தியா" அறிமுகமாகிறார். பார்த்தாலே பயத்தை தரும் "பவுன்சர்கள்" இந்த படத்தில் காமெடியில் கங்க்கியிருக்கிறார்கள். புதுமையை ரசிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த புதுமையை ரசிப்பார்கள். இயக்குனர் தியா பிரபல சேனல் ஒன்றில் "நாளைய இயக்குனர்" மேடையில் பரிசு வாங்கியவர். பரிசு பெற்று தந்த கதையை சினிமாவுக்காக செதுக்கி விரிவாக்கி காமெடி கலாட்டா படமாக தருகிறார்.
கதாநாயகியாக அஞ்சலி ராவ்("வன்ம்ம் " பட நாயகி), இசை - ரோஷன் சேதுராமன், ஒளிப்பதிவு - ஜெரால்டு ராஜமாணிக்கம், பாடல்கள் - ஸ்ரீதர் ராமசாமி, படத்தொகுப்பு - வெஸ்லி, நடனம் - நந்தா, சண்டைப் பயிற்சி - ஜேசு ,தயாரிப்பு நிர்வாகம் - நாகராஜன்.
படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. "கன்னா பின்னா" திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.Tags:
#Kanna PinnaComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
