அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுபவர் கௌதம் கார்த்திக். இவரது நடிப்பு இளம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
கௌதம் கார்த்திக் தற்போது அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மற்றொரு பிரபலமான நடிகர் இணைந்து நடிக்கவுள்ளார். அவரை பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தற்போது இப்டத்தின் கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் கதைகேற்ற ஏனைய நடிகர்களை சிறப்பாக தேர்வு செய்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளனர். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
