Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அமிதாப்புடன் ‘வி.ஐ.பி’ வெற்றியை கொண்டாடினார் தனுஷ்..!

•On July 21, 2014
dhanush amithab
Share

கடந்த வருடம் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’, ‘மரியான்’ ஆகியவை விமர்சன ரீதயாக பாராட்டப்பட்டாலும், தமிழில் வசூல் ரீதியாக அவரை சந்தோஷப்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் தனுஷின் 25வது படமாக வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ அவருக்கு மனநிறைவான வெற்றியை கொடுத்திருக்கிறது.

திரையிட்ட இடங்களில் எல்லாம் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி பேமிலி ஆடியன்சும் கூட்டம் கூட்டமாக படத்திற்கு வருவது அவரை சந்தோஷப்படுத்தியுள்ளது. தற்போது இந்தியில் அமிதாப்புடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்தின் படப்பிடிப்பில் நடித்துவரும் தனுஷ் அங்கே அமிதாப், அக்ஷரா, படத்தின் இயக்குனர் பால்கி ஆகியோருடன் தனது வெற்றியை கொண்டாடியுள்ளார்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.