Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அமலா ரிட்டர்ன்ஸ்...! ஆனால் யோகம் சின்னத்திரைக்கு..!!

•On July 14, 2014
Amala-akkineni
Share

இன்னைக்கு ட்ரெண்டுக்கு இப்படி ஒரு டைட்டிலை படிச்சதுமே அடடா.. இப்பதான் கல்யாணம் பண்ணுனாரு.. அதுக்குள்ளே திரும்பவும் நடிக்கவந்துட்டாரே.. அதுவும் சின்னத்திரைக்கு ஏன் போனாருன்னு நம்மாளுங்க எல்லாம் நம்ம மைனா’ அமபலாபாலை பத்தி ‘உச்’ கொட்ட ஆரம்பிக்க வேணாம்..

இவர் அவரல்ல.. 1980களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தாரே அந்த அமலா. தெலுங்கு சூப்பர் ஹீரோ நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே ஒதுங்கியவர் இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்புகிறார்.

ஆனால் வெள்ளித்திரையில் அல்ல. சின்னத்திரையில்.. ஆம் ‘உயிர்மெய்’ என்ற சீரியலில் நடிக்கிறார் அமலா. 12 டாக்டர்களை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ள தொடர் இது. இதில் ஒரு டாக்டராக அமலா நடிக்கிறார். ஏன் மீண்டும் சினிமாவுக்கு வராமல் சின்னத்திரைப்பக்கம் போய்விட்டீர்கள் என்று கேட்டால் நேர வசதிக்காகத்தான் சீரியலுக்கு வந்தேன் என்கிறார் அமலா. அப்பா இனி ரசிகர்களோட வீட்டுக்கே டைரக்டா போயிருவாரு அமலா..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.