(அப்பாடா)... ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் ஸ்ரீதேவி இல்லையாம்..!

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க இருப்பதற்கு மன்னிக்கவும். ஆனால் தேவை இருக்கிறதே.. மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார்.. இல்லையில்லை நதியாதான் நடிக்க இருக்கிறார் என முதலில் செய்திகள் அவ்வப்போது வெளியாகின.
அவை இல்லையென ஆனபின் சிம்ரன் தான் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என ஒரு தகவலும் வெளியானது. ஆனால் சிம்ரனே தான் நடிக்கவில்லை என அதற்கு விளக்கம் அளித்து, அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.. ஆனாலும் அந்த கேரக்டரில் அவர் நடிக்க விரும்பியது என்னவோ உண்மைதான்.
அதன்பின் ஸ்ரீதேவியின் பெயர் அடிபட ஆரம்பித்தது. ஸ்ரீதேவி நல்ல நடிகைதான். ஆனால் பெரிய நடிகை என்பதற்காக வலுக்கட்டாயமாக மீனா நடித்த கதாபத்திரத்தில் அவரை நடிக்க வைப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்பது தான் ரீமேக் செய்யும் குழுவினரோடு சம்பந்தப்பட்டவர்களின் கருத்தாக இருந்ததாம்.
அதற்கேற்றாற்போல் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கையும் இயக்கவுள்ள இயக்குனர் ஜீத்து ஜோசப் தமிழில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார். இனி அந்த கேரக்டரில் கவுதமி தான் நடிக்க இருக்கிறாரா என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
