Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித் பட டைட்டில்.. வாய் பிளக்கும் தனுஷ்..!

•On October 30, 2014
kollywood_stars_fasts_support_sri_lankan_tamils_photos_703b6ff
Share

அப்பாடா... ஒருவழியாக கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் நடித்துவரும் படத்துக்கு கடைசியில் பெயர் சூட்டிவிட்டார்கள். படத்தின் பெயர் ‘என்னை அறிந்தால்’.. எம்.ஜி.ஆர் பாடலான ‘உன்னை அறிந்தால்’ இங்கே அப்படியே அபவுட் டர்ன் அடித்து டைட்டிலாக மாறியிருக்கிறது

பொதுவாக அஜித்தின் முந்தைய படங்களின் டைட்டில்கள் எல்லாம் ஏதோ ஒரு செயலையோ அல்லது படத்தில் அவரது கேரக்டரின் பெயரை குறிக்கும் விதமாக இருக்கும். ஆனால் கௌதம் மேனன் ஆக்ஷன் படங்களுக்கு கூட சற்று இலக்கிய நயத்துடன் பெயர் வைப்பவர் என்பதால் ‘என்னை அறிந்தால்’ என தத்துவார்த்தமாக பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த டைட்டிலை கேள்விப்பட்ட தனுஷ் “டைட்டில் செம மாஸ் மற்றும் க்ளாஸ்... அஜித் சாருக்கேற்ற பொருத்தமான டைட்டில்.. கௌதம் சார் எப்போதும் தனது படங்களுக்கு டைட்டில் வைக்கும் விஷயத்தில் என்னை ஏமாற்றியதில்லை” என ஆச்சர்யப்பட்டு ட்வீட் அடித்திருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.