அஜித் பட இயக்குநருக்கு படம் கொடுத்த சமுத்திரகனி

அஜித் வாழ்வில் மிகமிகப்முக்கியமான படம் முகவரி. இந்தப்படத்தில் சினிமாவில் இசை வாய்ப்பு தேடும் இளைஞனாக நடித்திருப்பார் அஜித். இன்றளவிலும் மறக்கமுடியாத படமாக இருக்கிறது முகவரி.
அஜித் மட்டுமில்லாமல் சிம்புவை தொட்டிஜெயா படத்திலும் பரத்தை நேபாளி படத்திலும் பெரிய அளவில் பேச வைத்தவர் இயக்குநர் வி.ஜே.துரை. தமிழ் சினிமாவில் பல முக்கியமான படங்களை தந்தவர் வி.ஜே.துரை.
ஆறு மெழுகுவர்த்திகள் படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் இருந்தார். இதைக்கேள்விப்பட்ட நண்பர் இயக்குநர் சமுத்திரகனி நாம் படம் செய்யலாம் என அழைத்திருக்கிறார். மகிழ்ச்சியில் திளைத்த வி.ஜே.துரை இப்போது பட வேலைகளை ஆரம்பித்து விட்டார். கூடிய விரைவில் பட சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. நல்ல இயக்குனர்கள் இப்படியான வாய்ப்புகள் கிடைத்தால் தான் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
