Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித்தின் ரீமேக் படம் புதிய சாதனை படைக்க உள்ளது.

•On March 18, 2017
ajith
Share
ajith தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ள அஜித்தின் வீரம் திரைப்படம், புதிய சாதனையை படைக்க உள்ளது. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படமானது பவன் கல்யாண் நடிப்பில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 24-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு, தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்த படம் தமிழகத்திலும் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் வெளியான கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு, கட்டமராயுடு திரைப்படம் தமிழகத்தில் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதற்கு முன்னர் தமிழகத்தில் நேரடி தெலுங்கு படங்கள் படைத்த சாதனைகளை, கட்டமராயுடு முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒரு நேரடி தெலுங்குப் படம் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்தது, சிரஞ்சீவியின் கைது நம்பர் 150 தான் (70 லட்சம்). அதே போல ஒரு வாரத்தில் அதிகம் வசூல் செய்த நேரடி தெலுங்கு திரைப்படம் மகேஷ் பாபுவின் பிரம்மோட்சவம் (2.39 கோடி). இந்த இரண்டு சாதனைகளையும் கட்டமராயுடு முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.