உதயநிதி படத்தில் “தனுஷின்” நாயகி
தனுஷுக்கு ஜோடியாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ஷெரீன். உற்சாகம், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு சொல்லிகொள்ளும் படியாக படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் பீமா போன்ற படங்களில் குத்தாட்டம் போட்டார். கடைசியாக பூவா தலையா? என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
தற்போது நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். ஆம். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களை தொடர்ந்து உதயநிதி நடித்து வரும் நண்பேன்டா படத்தில் நடிக்கவிருக்கிறார் ஷெரீன். அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இது பற்றி இயக்குனர் ஜெகதீஷ் கூறும்போது, “ஷெரீன் ஒரு திறமையான நடிகை. அவர் இந்த படத்தில் உதயநிதியை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தற்போது கும்பகோணத்தில் படுவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்றார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
