கெளதம் படத்தில் மிகவும் இளமையான அஜித்

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த கெளதம் மேனனுக்கு கை கொடுக்கும் விதத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வெகு ஜோராக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதுவரை அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளும், சில ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்தன. இனி நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் த்ரிஷா நடிக்க இருக்கிறார். இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கும் அஜித்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் த்ரிஷா நடிக்க இருக்கிறார். அந்த ப்ளாஷ்பேக் காட்சிகளில் தான் மிக இளமையான அஜித் தோன்ற இருக்கிறார். அதற்காக இரவு பகல் பாராமல் உடற்பயிற்சி செய்து வருகிறாராம் அஜித்.
அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தை வெளியிட்டு விட்டு, இளமையான தோற்றத்தை சஸ்பென்சாக வைக்க திட்டமிட்டுள்ளனர். முற்றிலும் வித்தியாசமான படமாக உருவாகும் இந்த படத்தில், இதுவரை பார்க்காத அஜித்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
