பிஸியான பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமாவில் புதுப்புது யுக்திகளை கடைபிடித்து ஒளிப்பதிவில் பல சாதனைகளையும் பிரமாண்டத்தையும் படைத்துக் கொண்டிருப்பவர் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம். ஒளிப்பதிவாளர் என்பது மட்டுமன்றி உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல் படத்தின் மூலமாக தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதையும் நிருபித்தவர்.
இயக்குனர் மணிரத்னம் படங்களில் இவர் செய்த ஒளிப்பதிவு இன்றளவிலும் வெகுவாக பேசப்படுகிறது. தமிழ் மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்தியில் பால்கி இயக்கத்தில், இளையராஜா இசையில், அமிதாப் பச்சன், தனுஷ் மற்றும் அக்ஷராஹாசன் நடிக்கும் ஷமிதாப் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே பால்கி இயக்கிய பா, சீனி கம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
இது தவிர விக்ரம்குமார் இயக்கிய 13B என்ற திகில் படத்துக்கும் மிரட்டலான ஒளிப்பதிவு செய்தவர் பி.சி.ஸ்ரீராம். இவர் ஹிந்தியில் பணியாற்றும் நான்காம் படம் "ஷமிதாப்". மேலும் தற்போது, ஷங்கரின் மெகா பட்ஜெட் படமான "ஐ" படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர்.
தற்போது, பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள இவர், வருகிற 2015 வருடம் வரை பிஸியான ஒளிப்பாதிவாளர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
