ஆர்யா ஜோடி நயன்தாராவா? சமந்தாவா??

முன்தினம் பார்த்தேனே, அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையற தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை நேமிசந்த் ஜபக் வழங்க ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். இதற்காக நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோரிடம் பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. இவர்களில் யாராவது ஒருவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். மற்ற நடிகர் - நடிகையரின் தேர்வு நடைபெற்று வருகிறது.
முற்றிலும் மாறுபட்ட, மிக வித்தியாசமான ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, மும்பை, கோவா மற்றும் லண்டனிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அடுத்த வருடம் மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
