ஆனந்த அலை - சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா!!

 ,
சென்னை மீனம்பாக்கத்திலுள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் நிகழ்த்தும் "ஷாம்பவி மஹாமுத்ரா" எனப்படும் யோகா வகுப்பு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது.
செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6 மணிக்கு ஆரம்பமாகி, செப்டம்பர் 15ம் தேதி மாலை 7.30 மணியளவில் நிறைவடையும் இந்த யோகா வகுப்பில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொண்டு பலனடைய முடியும். வகுப்பில் பங்கு பெற முன்பதிவு அவசியம்.
சக்தி வாய்ந்த கிரியாவான "ஷாம்பவி மஹாமுத்ரா" எனப்படும் இந்தப் பயிற்சியானது உடல் ஆரோக்கியத்திற்கும் மன வளத்திற்கும் மட்டுமல்லாமல், சக்திவாய்ந்த தியானத்தின் வாயிலாக உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கவும் உறுதுணையாய் இருக்கிறது. இன்றைய இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தத்தாலும் பலவித நோய்களாலும் அவதிப்படும் மக்களுக்கு, இந்தப் பயிற்சி ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
2011ல் சென்னையில் சத்குரு நிகழ்த்திய யோகா நிகழ்ச்சியில், சுமார் 15,000 மக்கள் வகுப்பில் கலந்துகொண்டனர். திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில், கோவை, பாண்டிச்சேரி, புது தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் சத்குரு நடத்திய இந்த யோகா வகுப்புகளில் 75000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பலனடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோருக்கு ஒரே சமயத்தில் யோகா கற்றுத் தரும் இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகவே உள்ளது. சென்னையில் சத்குரு நிகழ்த்தும் இந்த இரண்டாவது மெகா யோகா நிகழ்ச்சியில் சுமார் 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்குரு துவங்கியுள்ள தன்னை உணர்தலுக்கான அமைதிப் புரட்சி சென்னையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மாற்றத்தை நிகழ்த்தக் காத்திருக்கிறது. யோகா வகுப்பில் கலந்து கொள்வோருக்கு தங்கும் வசதியும் மதிய உணவும் மட்டுமல்லாமல் நடமாடும் கழிப்பறை, குடிநீர் வசதி என அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
வகுப்பின் இடையிடையே 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும் ஈஷாவின் குருகுலக் கல்விமுறைப் பள்ளியான 'ஈஷா சம்ஸ்கிருதி' மாணவர்களின் களரிப்பயட்டு விளையாட்டுகளும் இசையும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைவருக்கும் கட்டாயம் ஒரு சொட்டு ஆன்மீகம் என்ற நோக்கில், சத்குரு நிகழ்த்திய 17 மகாசத்சங்கங்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சத்குருவின் அருளுரை மூலம் ஆனந்த அலையில் சங்கமித்தனர். "ஆனந்த அலை" என்ற, சத்குருவின் இந்த மகா சத்சங்கங்கள் நாடு முழுக்க தொடர்ந்து நிகழ்த்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: 9443400475, 9487895812. mediarelations@ishafoundation.org சென்னை சத்குருவுடன் யோகா வகுப்பைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு: 83000 11000, 97899 83260. போன்ற தொலைபேசி எங்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் மூலம் தகவல்களை பெறலாம்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
