முன்பு மரியான்! தற்போது அனேகன்!! தனுஷின் அடுத்தடுத்த அவதாரம்!!!

மரியான் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்துக்கு அனேகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘மாற்றான்’ படத்திற்கு தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘அனேகன்’ என்று பெயரிட்டுள்ளனர். அனேகன் என்றால் “ஒன்றானவன், உருவில் பலரானவன்” என்று பொருள்படும்.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக மும்பையை சேர்ந்த அமிரா ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்க ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
‘அயன்’, ‘மாற்றான்’ படங்களைப் போல இந்த படத்திற்காகவும் வெளிநாடு செல்லவிருக்கிறார் கே.வி.ஆனந்த். வியட்நாம், கம்போடியா, மலேசியா, பொலிவியா ஆகிய இடங்களில் அனேகன் படமாகிறது. சுபா கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அதுல் குல்கர்னி, ஜகன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடிக்க முதல்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 2-ந் தேதி புதுச்சேரியில் ஆரம்பமாகிறது.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஆர்யா ஜோடி நயன்தாராவா? சமந்தாவா??
Next Postசெப்டம்பர் 9-ல் கோச்சடையான் டீசர்!!
