செப்டம்பர் 9-ல் கோச்சடையான் டீசர்!!

ரஜினியின் கோச்சடையான் படத்தின் டீஸர் வரும் 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. எந்திரன் படத்தை அடுத்து ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து சௌந்தர்யா அஸ்வின் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுத்துள்ள படம் கோச்சடையான். தெலுங்கில் விக்ரம சிம்ஹாவாக ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும் இசை வெளியீடு குறித்தோ, ரிலீஸ் குறித்தோ எந்தவித அறிவிப்பும் இல்லை. இதனால் படம் ரிலீஸாகாது என்ற வதந்தி பரவியது. இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் இன்று தனித்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் சௌந்தர்யா கூறியிருப்பதாவது, “கோச்சடையான் படத்தின் டீஸர் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்“ என்று தெரிவித்துள்ளார். ஆக விநாயகர் சதுர்த்தி ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமான நாள் என்பதில் சந்தேகமில்லை.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
