"96" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

"கருப்பன்" படத்தை முடித்துவிட்டு "96" என பெயரிடப்பட்டுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இப்படத்தை நந்தகோபால் தயாரித்து வருகிறார்.
"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம்குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து முதன் முதலாக நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு கோவிந்த் மேனன் இசையமைத்து வருகிறார்.
"96" படத்தின் பர்ஸ்ட் லுக் வடிவமைப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
