Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'பொதுவாக எம்மனசு தங்கம்' ஆகஸ்ட் 11-ல் வெளியிடு!

On August 1, 2017
uthayaniithi
Share
uthayaniithi தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்தாலும், சரியான வெளியீட்டு தேதிக்காக 'பொதுவாக எம்மனசு தங்கம்' படக்குழு காத்திருந்தது. 'விவேகம்' படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால், 'பொதுவாக எம்மனசு தங்கம்' ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. புதுமுக இயக்குநர் தளபதி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் 'பொதுவாக எம்மனசு தங்கம்'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி, மயில்சாமி உள்ளிட்டோர் உதயநிதியுடன் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனி, மதுரை, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். uthaya 'பொதுவாக எம்மனசு தங்கம்' படப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.