Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'அருவா சண்ட' படப்பிடிப்பில் நிஜமாகவே ஹீரோவை வெட்டினார் வில்லன்!

On August 1, 2017
aruvaa
Share
aruvaa ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜாவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் "அருவாசண்ட". இப்படத்தை ஆதி ராஜன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. படத்தின் வில்லன் ஆடுகளம் திரைபடத்தில் நடித்த நரேனின் மருமகனாக செளந்தர்ராஜா நடிக்கிறார். படத்தின் நாயகன் ராஜா, மற்றும் செளந்தர்ராஜா இருவரும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த சண்டைக் காட்சியை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள் நாயகன் ராஜாவின் தாடையில் வெட்டியது. அதுமட்டுமல்லாது பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. படக்குழுவினர் பதட்டத்துடன் ஓடிச் சென்று ஐஸ்கட்டியை வைத்து முதலுதவி செய்தனர். பின்பு ராஜாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த பின்னர் இருவரும் மோதும் சண்டைக்காட்சி எடுத்து முடிக்கப் பட்டது. இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன்,சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, காதல் சுகுமார், சரத், அம்பானி சங்கர், ரஞ்சன், சிவசங்கர், தளபதி தினேஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.