Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

8-வது சுற்றை சமன் செய்தார் விஷ்வநாதன் ஆனந்த்

On January 22, 2018
Viswanathan-Anand-
Share
Viswanathan-Anand- இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 முண்ணனி வீரர்கள் விளையாடுகின்றனர். இதன் 8-வது சுற்றில், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஷ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் பீட்டர் ஸ்விட்லெர் ஆகியோர் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், போட்டியை சமன் செய்தார். எட்டு சுற்றுகளின் முடிவில், 2 வெற்றி, 5 'டிரா', ஒரு தோல்வி என 4.5 புள்ளிகளுடன் ஆனந்த், 3-வது இடத்தை ரஷியாவின் செர்கீ கார்ஜகின்-உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இன்னும் ஐந்து சுற்றுகள் மீதமுள்ள நிலையில், ஆனந்த் இன்னும் இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே, அவருக்கு சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்கு முன்னர் ஆனந்த ஐந்து முறை டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.