3வது நாளாக இன்றும் தொடர்ந்த வருமான வரிச் சோதனை !

[caption id="attachment_36330" align="alignnone" width="640"]
Income tax red stamp text on white[/caption]
மிடாஸ் மதுபான ஆலை, நமது எம்.ஜி.ஆர்.அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், ஈக்காட்டுதாங்கலில் உள்ள திவாகரனின் உறவினர், தினகரனின் ஜோதிடர் வீடு, புதுச்சேரியிலுள்ள நகைகடை உள்ளிட்ட 40 இடங்களில் 3வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. திருப்பாத்திரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்குசந்தையில் முதலீடு செய்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியிலுள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடை, லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி, கொடநாடு அருகிலுள்ள கர்சன் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3வது நாளாக
இன்றும் சோதனை நடந்து வருகிறது.

இன்றும் சோதனை நடந்து வருகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.