திரூப்போரூா் அருகே பாழடைந்த சாலையால் மக்கள் அவதி !

காஞ்சிபுரமாவட்டம் திரூப்போரூா் ஓன்றியத்திற்கு உட்பட்டது இள்ளளூா் ஊராட்சி. இந்த ஊராட்சி மூன்று கிராமங்களை உள்ளடக்கியது. இதில் பொியாா்நகா் என்று தனியாக ஓா் பகுதி உள்ளது.
இதில் சுமாா் 350 குடும்பங்களில் 600க்கும் மேற்பட்டவா்கள் வசித்துவருகின்றனா். இம்மக்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியே சென்று வரவும் மற்றமக்கள் இந்த ஊருக்குள் வர ஓரே ஒரு சாலை மட்டுமே உள்ளது.
இந்த சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டுள்ளது. அதன்பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சாலை எந்த பராமரிப்புமின்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதனைத்தொடா்ந்து ஜல்லி செளடுமண் கொட்டப்பட்டு அப்படியே விடப்பட்டதால், தற்பொழுது பெய்து வரும் கனமழையால் இந்த பொியாா்நகரின் சாலை மிகவும் சேதமடைத்து உள்ளதாக அப்பகுதிமக்கள் தொிவிகின்றனர்.
இதற்கு தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரமாவட்டம் திரூப்போரூா் ஓன்றியத்திற்கு உட்பட்ட இள்ளளூா் ஊராட்சி கிராமத்தை உள்ளடக்கிய பொியாா்நகா் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇனிமே பிரியாணிய வெட்டி தின்னுவோம் !
