'2.0' படபிடிப்பின் போது ரஜினிகாந்தின் காலில் காயம் ஏற்பட்டது

சென்னையில் நடந்த ‘2.0’ படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘2.0’. இந்த படத்தை ஷங்கர்இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அக்ஷய்குமார், நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேற்று பிற்பகலில் இருந்து படப்பிடிப்பு சென்னை அருகே மேலகோட்டையூர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் அருகே நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை முடிந்த சில நிமிடங்களிலேயே அவர் வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
