Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய்-அட்லி இணையும் படம் ஜனவரியில் தொடங்குகிறது

On December 4, 2016
1455022917_vijay-atlee
Share

1455022917_vijay-atlee‘ராஜா ராணி’ வெற்றிக்குப்பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘தெறி. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அடுத்து அட்லி இயக்கும் புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அட்லி இயக்கும் இப்படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான பணிகளில் அட்லி தீவிரமாகி இருக்கிறார். தற்போது விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படப்பிடிப்பு கடந்த 29-ந்தேதி நிறைவு பெற்றது. அடுத்து விஜய்-அட்ல இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கதாநாயகி யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் 60-வது படமாக உருவாகி இருக்கும் 'பைரவா' வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தை பரதன் இயக்கியிருக்கிறார்.
 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.