Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் பவர் பாண்டி

On December 4, 2016
cy0-vnsucaarika
Share
cy0-vnsucaarikaதனுஷ் இயக்கி வரும் புதிய படம் ‘பவர் பாண்டி’. இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், மடோனா செபஸ்டியான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். பவர் பாண்டி படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தனுஷ் இயக்கத்தில் முதன்முதலாக உருவாகிவரும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.