Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு! விசாரணை தீவிரம்

On August 15, 2017
vedei
Share
vedei சுதந்திர தின விழா கொண்டாடப்படும் தருணத்தில், ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மியாப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் டிப்போ செயல்பட்டு வரும் இடத்தின் அருகில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தைச் சுற்றி ஏழை மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் திடீரென நேற்று வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி அடித்துக் கொண்டு சத்தம் வந்த பகுதியை நோக்கி பொதுமக்கள் சென்று பார்த்தனர். அங்கு, 500 மீட்டர் தூரத்தில் எருமையின் தலை ஒன்று சிதறி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். குப்பை மேட்டில் கிடந்துள்ள வெடிப்பொருளை எருமை மாடு தின்ன முயன்ற போது வெடித்திருக்கலாம் என்று மியாப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வெடிகுண்டு தொடர்பான வேறு எந்தப் பொருட்களும் இந்தப் பகுதியில் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். குண்டு வெடித்து எருமை பலியானது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய தடயவியல் துறைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.