Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எம்.ஜி.ஆருக்கு விழா, கருணாநிதிக்கு அழைப்பு!

On August 15, 2017
karunanidhi
Share
karunanidhi எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 19ம் தேதி திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழா அழைப்பிதழில் 3 திமுக எம்எல்ஏக்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதில், திருவாரூர் எம்எல்ஏ திமுக தலைவர் கருணாநிதி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசு, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ஆகியோரின் பெயர்கள் வாழ்த்துரைப் பகுதியில் அச்சிடப்பட்டுள்ளன. இவர்கள் மூவருக்கு அழைப்பு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவான திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.