ஸ்டிரைக் தற்காலிக வாபஸ் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படும்!

நான்கு நாட்களாக நீடித்த தியேட்டர் ஸ்ட்ரைக் தமிழக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. திரையரங்குகளில் டிக்கெட் விலையை நிர்ணயிக்க கமிட்டி ஒன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் மொத்தம் 12 பேர் இருப்பார்கள். அதில் 6 பேர் தமிழக அரசு அதிகாரிகள் மீதி 6 பேர் திரைத்துறையை சார்ந்தவர்கள். திரைத்துறை சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், Hon. செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ். ஆர். பிரபு, தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியன், அருள்பதி ஆகியோர் இடம்பெறுவர். இந்த கமிட்டி தமிழக அரசோடு இணைந்து டிக்கெட் கட்டணம் மற்றவையை முடிவு செய்யும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅட பப்ளிக் ஸ்டாரா? யாரு அவரு??
