Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அட பப்ளிக் ஸ்டாரா? யாரு அவரு??

On July 6, 2017
thapatam
Share
thapatam தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'தப்பாட்டம்'. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் நாயகன் துரை சுதாகருக்கு படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்களால் ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டு அவர் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் திரைப்படம் "தப்பாட்டம்". தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் இந்த "தப்பாட்டம்" படம். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான்:- கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம் என்று கூறியுள்ளார். இப்படத்திற்கு இசை - பழநி பாலு, ஒளிப்பதிவு - ராஜன், பாடலாசிரியர் - விக்டர் தாஸ், கார்த்திக் &, பாலு, சண்டைப்பயிற்சி - ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு - ஆதம் பாவா விரைவில் இப்படம் திரைக்கு வெளிவரவிருக்கிறது. முன்னதாக இப்படம் வெளியாகி கிடைக்கும் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.