ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை! - தீபா ஆவேச பேச்சு...

மறைந்த தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் ஜெ.தீபா, இன்று தன்னுடைய இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததாக ஜெ.தீபா குறிப்பிட்டார். ரிச்சர்ட் பீலே உட்பட மருத்துவர்கள் அளித்த அந்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தனது அத்தை ஜெயலலிதா அவர்களுக்கு அவரது ஒட்டுமொத்த சிகிச்சைக்கு ரூ.5.5 கோடி செலவு செலவாகியதாகவும், அதனை அவரது உறவினர்கள் அளித்தனர் என்றும் நேற்று அப்போலோ மருத்துவர்கள் ஏற்பாடு செய்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ரூ.5.5 கோடி பணத்தை மருத்துவமனையில் செலவு செய்யவில்லை. அப்போது அந்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்த உறவினர் யார் என்று கேட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 2 மாதங்களுக்குப் பின் விளக்கம் ஏன்? மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க எனக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை என கருதுகிறேன்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார் தீபா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
