என்னது? பார்த்தவுடன் காதல் வயபட்டார்களா??

கிரியேட்டிவ் டீம்ஸ் வழங்கும் E.R ஆனந்தன் தயாரித்திருக்கும் திரைப்படம் "கண்டேன் காதல் கொண்டேன்". இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் வெங்கட்G.சாமி. இத்திரைப்படத்தில் சன்மியூசிக் புகழ் பாலா கதாநாயகனாகவும், அஷ்வினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, "பத்திரகாளி" ராஜசேகர், "சூதுகவ்வும்" ராதா, கே.எஸ்.பழனி, கிங்ஸ் A.மோகன், கிச்சா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு நாகா இசையமைக்க, சுரேஷ் தேவன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் அர்ஸ் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, “கதைப்படி நாயகன், நாயகி இருவரும் பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றனர். இருவரும் சிறிது காலம் தனியாக சேர்ந்து வாழலாம், இத்தைகைய வாழ்க்கை பிடித்தால் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதற்காக ஊரை விட்டு வெளியேறி தனியாக நவீன கால முறைப்படி காதலர்கள் இருவரும் வாழ்கின்றனர். ஆனால் பின்னர்தான் தெரியவருகின்றது இவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலை கொண்டவர்கள் என்று. அதே நேரம் இவர்களின் காதலால் இவர்களின் குடும்பங்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வீடு திரும்புகின்றனர்.
வீட்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்களா? பின்னர் அவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லியிருக்கின்றோம், இத்திரைப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்படத்தில் பாலா, அஷ்வினி, மயில்சாமி, "பத்திரகாளி" ராஜசேகர், "சூதுகவ்வும்" ராதா, கே.ஸ் பழனி, கிங்ஸ் A.மோகன், கிச்சா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
